காட்பாடி: 12 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்!
வேலூர் மாவட்டம் பொன்னையிலிருந்து சித்தூர் செல்லும் அப்பகுதியில் வேலூர் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் உஷாராணி மற்றும் குழுவினர் இணைந்து அப்பகுதியில் அனைத்து வாகனங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பொன்னையிலிருந்து சித்தூர் சொல்லும் சாலையில் சீனிவாசபுரம் என்ற பகுதியில் சாலை ஓரமாக இருந்த வண்டியில் சோதனை செய்து அதிலிருந்து 12 மூட்டைகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து திருவலம் கிடங்கில் ஒப்படைத்தனர்.