வேலூர் மாவட்டம் காட்பாடி, பொன்னை அடுத்த குப்புரெட்டியூர் பகுதியை சேர்ந்த நரசிம்மன் (90) என்பவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இப்பகுதி மக்கள் இறந்தவர்களின் உடல்களை இதுவரை தனியார் நிலத்தின் வழியாக எடுத்து சென்று பொன்னை ஆற்றின் ஓரம் உள்ள சுகாடுகாட்டில் அடக்கம் செய்து வந்த நிலையில் தற்போது சுடுகாட்டுக்கு செல்ல உரிய பாதை இல்லாததால் இறந்த முதியவர் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் இருப்பதாகவும், சுடுகாட்டுக்கு முறையான பாதை வசதி வேண்டி பல முறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று சுமார் 50 பேர் பொன்னை - திருவலம் செல்லும் சாலையில் கற்கலை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மேல்பாடி காவல் துறையினரின் மற்றும் வருவாய் துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது.
ஆய்வு மேற்கொண்டு சுடுகாட்டுக்கு செல்ல முறையான பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.