சட்டம் ஒழுங்கு பிரச்னையில் திமுக அரசு கடுமையாக இருந்து வருகிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். "ஜாகிர் உசேன் கொலை வழக்கின் குற்றவாளிகள் எந்த பாரபட்சமும் இன்றி சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள். சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ள இந்த அரசு அனுமதிக்காது. கொலை வழக்கு மட்டுமல்ல எந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களும் சட்டத்தின்பிடியில் இருந்து தப்பிக்க முடியாது" என்றார்.