ஏப்ரல் மாதம் மீண்டும் மலையேற்றப் பாதைகள் திறக்கப்படவுள்ளதால், தமிழ்நாட்டின் அழகைக் கண்டு ரசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். "Trek TamilNadu மூலம் கடந்த 3 மாதங்களில் 4,792 பேர் மலையேறியுள்ளனர். இதன்மூலம் ரூ.63.43 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதில் ரூ.49.51 லட்சம் நேரடியாக சுற்றுலாவை மேம்படுத்த உதவிய பழங்குடியின இளைஞர்களுக்கு சென்றுள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.