திருப்பூர்: பல்லடத்தில் தாய், தந்தை, மகன் உட்பட மூவர் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவ.28ம் தேதி தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு, இவர்களின் மகன் செந்தில்குமார் ஆகியோர் சேமலைக்கவுண்டபாளைத்தில் உள்ள வீட்டில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இதில், குற்றவாளிகளை பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், சம்பவம் நடந்து 110 நாட்களை கடந்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.