TN: வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படும்

69பார்த்தது
TN: வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படும்
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, "ஆந்திராவில் வீட்டிற்கே சென்று ரேஷன் கடை பொருட்களை வழங்கும் திட்டம் உள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். தமிழ்நாட்டிலும் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தொடர்புடைய செய்தி