வெறி நாய் கடித்து விட்டால் முதலில் கடிபட்ட இடத்தை சோப்பு தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். குழாயிலிருந்து வேகமாக விழுகின்ற தண்ணீரில் காயத்தை 15 நிமிடங்கள் வரை காட்ட வேண்டும். பின்னர் சோப்பை காயத்தின் மீது தடவி, நன்கு கழுவி விட்டு உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். காயம் அதிகமாக இருந்தால் ரேபிஸ் இம்முனோகுளோபின் போன்ற மருந்துகளை முதலில் செலுத்திவிட்டு பின்னர் ரேபிஸ் தடுப்பூசி 5 தவணை செலுத்திக்கொள்ளுதல் வேண்டும்.