உத்தர பிரதேசம்: கூடுதல் வரதட்சணை கேட்டு, பெண்ணை கணவர் வீட்டார் அடித்து துரத்திய வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சனா என்ற பெண்ணுக்கும், ரமேஷ் என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ரஞ்சனாவின் நகைகளை பறித்துக் கொண்ட கணவர் வீட்டார் ஏற்கனவே கொடுத்த வரதட்சணை போதாது என கூறி ரூ.5 லட்சம் கூடுதலாக கேட்டு துன்புறுத்தி வந்தனர். இதுகுறித்து போலீஸ் விசாரிக்கிறது.