இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்திட வலுவான தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கைக் கடற்படை இன்று கைது செய்துள்ள நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.