நீண்டகாலமாக விண்வெளியில் இருந்ததால் சுனிதா வில்லியம்ஸ்க்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்கள் புவி ஈர்ப்பு சக்திக்கு ஈடுகொடுத்து சமநிலையில் நிற்க முடியாமல் அவதிப்படலாம், இதனால் அவர்களால் நடக்கவும் முடியாமல் போகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இது தற்காலிகமானதுதான் என்றும், சில நாட்களுக்கு பின்பு சரியான பயிற்சி மூலம் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.