மாணவி கொலை - காட்பாடியில் கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் இணைந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி மருத்துவரை பாலியல் வல்லுறவு செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் நீதி கேட்டும் இந்நிகழ்வுகள் இனி நடைபெறாமல் தடுக்க வலியுறுத்தி காட்பாடி ஆக்சிலியம் காலேஜ் ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பெ. அமுதா தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். பரசுராமன், விச தாலுக்கா செயலாளர் எம். கணேஷ், விதொச மாவட்ட செயலாளர் செ. ஏகலைவன், எல். நவீன் (வாலிபர் சங்கம்), பெ. திலீபன் (மாணவர் சங்கம்), தா. நேதாஜி (தமுஎகச), ஜி. கோவிந்தராஜ் மாற்றுத்திறனாளிகள் சங்கம்), வழக்கறிஞர் கனிமொழி ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் மாதர் சங்க மாநில செயலாளர் எஸ். டி. சங்கரி நிறைவு செய்து கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி