திமுக முன்னாள் அமைச்சரும், பொன்னேரி தொகுதி முன்னாள் MLA-வான க.சுந்தரம் (76) உடல்நலக்குறைவால் இன்று (செப்.18) காலமானார். 1989 கலைஞர் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் க.சுந்தரம். திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். கடந்தாண்டு திமுக முப்பெரும் விழாவில் க.சுந்தரத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘அண்ணா விருது’ வழங்கி கெளரவித்திருந்தார்.