நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது கடந்த 16ஆம் தேதி பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2019ஆம் ஆண்டு அவருடன் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த புகாரின் பேரில் தெலங்கானா காவல் துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், தெலங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்து நடன இயக்குநர் ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.