தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு 335
பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா உள்ளிட்ட அரசின் நல திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் , துணை மேயர் சுனில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.