வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக சுரேஷ்பாபு பணியாற்றி வந்தார். இவர் தன் பணியை சரியாக செய்யாததாலும், வழக்கு பதிவு செய்வதில் அலட்சியம் காட்டியதாகவும் எழுந்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் சப் இன்ஸ்பெக்டர் குமார் உதவி சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்துள்ளனர்.
கடந்த 19 ஆம் தேதி பாக்கம்பாளையம் அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு இன்ஸ்டாவில் மற்றொரு பெண்ணிடம் தொடர்பில் இருந்ததை தட்டி கேட்டதால் தன்னிடம் தனிமையில் இருந்த வீடியோ போட்டோவை சமூக வலை தளத்தில் பதிவிட்டு உன்னை அசிங்க படுத்திவிடுவேன் என கூறி மிரட்டியதாக வேப்பங்குப்பம் போலீஸில் புகார் அளித்தார்.
இதனை உரிய நேரத்தில் விசாரனை செய்து வழக்கு பதிவு செய்ய தவறியதாகவும், மேலும் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக எல்லப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மோதிக்கொண்ட போது போதிய பாதுகாப்பு கொடுக்க தவறியதாக கூறி இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப் இன்ஸ்பெக்டர் குமார் உதவி சப் இன்ஸ்பெக்டர் கோபினாதன் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.