ரூ.1,332 கோடியில் திருப்பதி - காட்பாடி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 400 கிராமங்கள் மற்றும் 14 லட்சம் மக்களை இணைக்கும் வகையில் இரட்டை ரயில் பாதை அமையும். 104 கி.மீ ரயில் பாதை பிரிவை இரட்டை ரயில் பாதையாக மாற்றப்படும் என ஒன்றிய அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.