ஏப்ரல் 1 ம் தேதி அதிமுக அமைச்சர் வீரமணி நேரில் ஆஜராக உத்தரவு

50பார்த்தது
முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை அடிப்படையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கானது தற்போது திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கை ஏற்று தொடர உத்தரவிட்டுள்ளது வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்னாள் அதிமுக அமைச்சர் வீரமணி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.



கே. சி. வீரமணி தனது பிரமாணப் பத்திரத்தில் ஏராளமான சொத்துகளை மறைத்திருப்பதை கண்டுபிடித்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


அதன் பிறகு அரசு வழக்கறிஞர் வாதாடும் போது தேர்தல் ஆணையத்தின் மூலம் இந்த வழக்கானது தொடரப்பட்டுள்ளது இந்த வழக்கின் மீது வழக்கை தொடர்ந்து நடத்தி விசாரணையின் போது இந்த வழக்கை நீதிபதி முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி மகாலட்சுமி இந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஒத்தி வைத்தார்.

பின்னர் இந்த வழக்கை ஏற்று நடத்த கோர்ட் ஒப்புக்கொண்டு அனைத்து ஆவணங்களும் போலியானது என்று தெரிய வருகிறது இதனால் இந்த வழக்கை கோர்ட் ஏற்று நடத்தும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி