ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலாஜா தாலுகா அனந்தலை கிராமத்தைச் சேர்ந்த அருள் (32) என்பவரை இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி கிரண்சுருதி அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் வளர்மதிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அருளை குண்டா் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அருளை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.