தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இதில் 5 சனிக்கிழமைகள் முழு வேலை நாளாக பள்ளிகள் இயங்கி வந்த நிலையில் அடுத்து வரும் 7 சனிக்கிழமைகளில் செப்- 21, 28, அக்-5, 19, 26, நவம்பர் 9, 23 ஆகிய தேதிகளில் அரை நாள் மட்டும் வகுப்புகளை நடத்தப்படும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவை தேர்தல் காரணமாக விடுமுறை தினங்களில் மாற்றம் ஏற்பட்டது. அதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது