பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனியை பதப்படுத்தினால் பனங்கற்கண்டு கிடைக்கும். இதில் சுண்ணாம்புச் சத்து, இரும்பு, சாம்பல், புரதச்சத்துகள், மல்டி-வைட்டமின்களான துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் உள்ளன. பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்துவர மார்புச்சளி நீங்கும். பனங்கற்கண்டை சுவைத்து உமிழ்நீரை சிறுக சிறுக விழுங்கி வர வாய் துர்நாற்றம், தொண்டைப்புண், வலி இவை நீங்கும். இதை பானமாக அருந்துவதால் இதய நோய் குணமாகும்.