சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45 - ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.50 - ரூ.60-யாக உயர்ந்துள்ளது. தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குறைந்திருந்த தக்காளி விலை தற்போது அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 - ரூ.45க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் 2அரை கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.