ஆற்காடு நகராட்சியில் களப்பணி உதவியாளராக
வேலை செய்து வரும் ஒருவர், ஆம்பூர் மற்றும் சோளிங்கர் நகராட்சியில்
வேலை செய்யும் போது ஆற்காடு பகுதியை சேர்ந்த 10- க்கும் மேற்பட்டோரிடம் நகராட்சியிலும், சத்துணவு
வேலை வாங்கித்தருவதாகவும் மற்றும் கடனாகவும் பணம் வாங்கியுள்ளார். ஆனால் இது நாள் வரை
வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (செப்.13) அவர் ஆற்காடு நகராட்சிக்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் பணம் கொடுத்தவர்கள் சென்று அவரை பிடித்து ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர். மேலும், இவர் மீது சுமார் ரூ. 15 லட்சத்திற்கு மேல் மோசடி புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.