நெமிலி தாலுகா திருமால்பூரில் மணிகண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரை முக்கிய நிர்வாகிகள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து திருமால்பூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெருக்களில் உள்ள வீடுகளின் மின்வயர்களை மின்வாரியத்தினர் துண்டித்து வைத்தனர்.