மலை கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

52பார்த்தது
*திருப்பத்தூரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் ஜவ்வாது மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. *

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் ஜவ்வாது மலைவாழ் மக்கள் சங்கம் இணைந்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநில தலைவர் டில்லி பாபு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து 2006 இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட வன உரிமை சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ளது அந்தச் சட்டத்தை அமல்படுத்தி ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு அவர்கள் பயிர் செய்து வரும் நிலங்களுக்கும் வீடுகளுக்கும் மரங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் இந்த சட்டத்தினால் வனங்களில் வசிக்கும் ஆதிவாசிகள் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும். வனத்துறை வருவதற்கு முன்பு என்னென்ன உரிமைகளை மக்கள் அனுபவித்து வந்தார்களோ அந்த உரிமைகள் அனைத்திற்கும் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி