உலகில் தானிய உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. ஆனால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்படுகிறது. அரசு தரவுகளின் படி சுமார் ரூ.58,000 கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் வீணடிக்கப்படுகிறது. அதே நேரத்தில் உலகில் கோடிக்கணக்கான மக்கள் பசியுடன் தூங்குகிறார்கள். 2021-ம் ஆண்டில் 76.8 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதாக கண்டறியப்பட்டனர். அதில் 22.4 கோடி (29%) மக்கள் இந்தியர்கள்.