வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் வினாடிக்கு 4000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் வெளியேற்றப்படும் நீரை சேமிக்கும் வகையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் சேமித்து வருகின்றனர். 47.5 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில், தற்போது 46 அடி நீர் கொள்ளளவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வீராணம் ஏரியிலிருந்து சேத்தியார்தோப்பு அனைத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.