திரிச்சூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஹரியானாவைச் சேர்ந்த மேவாட் கொள்ளையர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஹரியானாவில் மேவாட் மற்றும் ராஜஸ்தானில் பவாரியா ஆகிய இரண்டு குழுக்களும் பிரபலமான கொள்ளை குழுக்கள் ஆகும். இவர்கள் போக்குவரத்து தொழில் செய்வது போல லாரி அல்லது கண்டெய்னர்களில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அங்கு கொள்ளையடித்துவிட்டு பெரும் தொகையுடன் சொந்த ஊருக்கு தப்பி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.