ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்தர் (28). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை தெரு நாய் கடித்துள்ளது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரேபிஸ் முற்றிய நிலையில் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார். ஒருகட்டத்தில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தன்னைத்தானே கொடூரமாக தாக்கி கொண்டார். இதனால் அதிகமாக ரத்தம் பிரிந்து மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.