மேட்டூர் எல்லையில் உள்ள காரைக்காடு செக்போஸ்ட்டில் தமிழக போலீசாரை உ.பி., சுற்றுலா பயணிகள் கடப்பாரையால் கொடூரமாக தாக்கினர். பஸ் ஓட்டுநரிடம் போலீசார், ஆவணங்களை கேட்டபோது ஏற்பட்ட வார்த்தை மோதலில், பேருந்தில் இருந்த இளைஞர்கள் சிலர் கடப்பாரையை கொண்டு போலீசாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் 4 போலீசார் காயமடைந்தனர். போலீசாருக்கு ஆதரவாக அங்கு திரண்ட பொதுமக்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர்களை பிடித்து தாக்கினர்.