Humans of Bombay ஊடகத்திற்கு சமீபத்தில் நடிகர் சோனு சூட் பேட்டியளித்திருந்தார். அப்போது அரசியலுக்கு வருவீர்களா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “எனக்கு முதலமைச்சர் பதவிக்கான ஆஃபர் வழங்கப்பட்டது. நான் மறுத்ததால், துணை முதலமைச்சராக வேண்டும் என்றார்கள். நாட்டிலுள்ள மிகப் பெரிய ஆட்கள் மாநிலங்களவையில் இடம் கொடுத்தார்கள். அரசியலில் எதற்கும் போராட வேண்டிய அவசியம் இல்லை என்று எடுத்துச் சொன்னார்கள்" என கூறினார்.