தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக்கூறி பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (டிச.27) தனது வீட்டின் முன்பு தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளானது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட பாஜக நிர்வாகி பிரபாகரன் என்பவர், அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டதை டிவியில் பார்த்து அவரும் தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.