சென்னை மேற்கு மாவட்டக் கழக பிரதிநிதியாக பணியாற்றி வரும் சிவராஜ் என்பவருக்கு சமீபத்தில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அதில் அவர் தனது ஒரு காலினை இழந்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தொகுதியில் வசித்து வரும் அவர், செயற்கைக் கால் வாங்குவதற்கு நிதி உதவி வேண்டி, உதயநிதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பேரில் இன்று (டிச.26) உதயநிதி ஸ்டாலின் அவருக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பில் செயற்கைக் கால் வழங்கினார்.