நம் உடலின் இயக்கம் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமெனில், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். எந்த வயதினராக இருந்தாலும், புதிய விஷயங்களைக் கற்கத் தயங்காதீர்கள். மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் செஸ், சுடோகு போன்றவை விளையாடலாம். தியான பயிற்சி செய்வதன் மூலம், மூளையின் ஆற்றல் அதிகரிப்பதோடு, மன அழுத்தம் அனைத்தும் நீங்கும்.