ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் மிக அவசியம். நிம்மதியான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உடல் மிக அவசியமாகும். காலையில் பல வகையான உடற்பயிற்சிகளை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதில் ஜாகிங்கும் அடங்கும். தூங்கி எழுந்தவுடன் தினமும் அரை மணி நேரம் ஜாக் செய்வது பல வித நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். எடை இழப்பு ஏற்படும், மனநலம் மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், ரத்த அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தும்.