உலக அளவில் சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்களே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ‘சர்வதேச சாக்லேட் தினம்’ செப்டம்பர் 13ம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. அதேபோல் ‘உலக சாக்லேட் தினம்’ ஜூலை 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உண்ணக்கூடிய வகையிலான சாக்லேட்டுகளை பிரபலமாக்கிய ஹெர்ஷே சாக்லேட் கம்பெனியின் நிறுவனரான மில்டன் எஸ் ஹெர்ஷேவின் பிறந்த நாளை கௌரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.