மேஷம்: உங்கள் ஆசைகள் எளிதில் நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்கள் காணப்படும். இன்றைய நாள் நிதிநிலைமை வளர்ச்சிகரமாக இருக்கும். இன்று சிறந்த ஆரோக்கியத்தின் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ரிஷபம்: உங்கள் செயல்களை பொறுமையுடன் கவனமாக கையாள வேண்டும். பிரார்த்தனை மற்றும் இறை மந்திரங்கள் மூலம் நன்மை விளைவதைக் காண்பீர்கள். இன்று நிதி வளர்ச்சி சற்று குறைந்து காணப்படும். இன்று உங்க ஆரோக்கியத்தில் தொடை அல்லது கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்: இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புத்துணர்ச்சி பெறுவீர்கள். இதன் மூலம் உங்கள் தொடர்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு நிதி நிலைமை அமோகமாக இருக்கும். மேலும் ஆரோக்கியமான உடல்நிலையால் மகிழ்ச்சி காணப்படும்.
கடகம்: இன்று எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். மனம் திறந்து அந்த வாய்ப்புகளை எற்றுக் கொள்ளுங்கள். பணியில் பதட்டம் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நிதி ஏற்றத் தாழ்வு உங்களுக்கு கவலையை உண்டாக்கும். பண இழப்பு ஏற்படாமல் இருக்க நீங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
சிம்மம்: இன்று சில மாறுதல்கள் ஏற்படும். பொறுமையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். நிதி நிலைமை மகிழ்சிகரமாக இருக்காது. இன்று அதிக செலவுகளை சந்திக்க நேரும். உடற்பயிற்சி செய்வதன் மூல உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கன்னி: இன்று சிறந்த பலன்கள் விளையும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் வளர்ச்சியும் உங்கள வாழ்வில் நன்மையும் விளையும். இன்றைய நாள் நிதி வளர்ச்சி அபாரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்: வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் சாதகமான பலன் கிடைக்கும். இதனை உண்மையாக நீங்கள் முயற்சி எடுக்கலாம். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்: இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். ஆன்மீக ஈடுபாடு நன்மை அளிக்கும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் குடும்பத்திற்காக அதிக பணம் செலவு செய்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.
தனுசு: ஆன்மீக இசையை கேட்பதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். முக்கிய
முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நிதி வளர்ச்சி மகிழ்சிகரமாக இருக்காது. பெரிய முதலீடுகள் தவிர்ப்பது நல்லது. சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவு. வீட்டில் உள்ளவர்களில் உடல்நலம் சற்று குறைய வாய்ப்புகள் உண்டு.
மகரம்: நீங்கள் அமைதியாக இருக்க கேளிக்கை நிகழ்ச்சி களைக் கண்டு மகிழுங்கள். உங்கள் அன்றாட செயல்களில் கவனம் செலுத்துங்கள். இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கண் எரிச்சல் அல்லது பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்: இன்று உற்சாகமான மாறுதல்களைக் காண்பீர்கள். இனிமையான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். இன்றைய நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்: உங்கள் இலக்குகளை அடைவதற்கு நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். பணி மாற்றம் அல்லது இட மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமை எதிர்பார்த்த அளவிற்கு காணப்படாது. இன்று தூக்கப் பிரச்சினையால் அவதிப்படுவீர்கள்.