திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சித்தருக்காவூர் புதூர் கிளை நூலக வாசகர் வட்டம் நிகழ்வில்,
"நினைவுகளின் நதி"
" நீ உதிர்த்த சிறகின் பறவை" என்ற இரண்டு கவிதை தொகுப்புகள் அறிமுக விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில்,
வாசகர் வட்ட தலைவர்
பொன். சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
கிளை நூலகர் ஜா. தமீம் அனைவரையும் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர்
அ. குலாப் ஜான், தலைமையாசிரியர்
டி. ஆர். நம்பெருமாள், ஓய்வு ஆசிரியர் மீராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேராசிரியர்
ஆ. மாணிக்கவேலு அவர்கள் இரண்டு நூல்கள் அறிமுகம் செய்து உரையாற்றினார்
"இந்த கவிதை தொகுப்பு காதல் சார்ந்து இருக்கிறது எனவும் கவிஞர் மீ. யூசுப் ஜாகீர் அவர்கள் சிறந்த படைப்பாளியாக மிளிருவார்" எனவும் கூறினார்.
மேலும் கூறுகையில், "இந்த இரண்டு கவிதை தொகுப்புகள் அனைவரும் எளிதில் படித்து தெரியும் வகையில் எழுதியுள்ளார் இவருடைய கவித்திறன் மேலும் பல நூல்களை எழுதி வளரும் கவிஞனாக வருவார்" எனக் கூறினார்.
வாழ்த்துரை வழங்கிய ஆசிரியர் பயிற்றுநர் சுப. தமிழ் நேசன் அவர்கள் கூறியது
"இளம் கவிஞர் யூசுப் ஜாகீர் இலக்கியத் துறையில் சாதிப்பார்" என கூறினார்
நிகழ்வில் மருத்துவர் எஸ். சம்பந்தன், ஓய்வு ஆசிரியர் எம். புண்ணியகோட்டி,
அ. சுப்பிரமணியன் நிகழ்வில் தலா ரூபாய் 1000 செலுத்தி புரவலர்களாக இணைந்தனர்.