புதுச்சேரியில் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இந்நிலையில் சங்கராபரணி ஆற்றுக் கரையோரம் ஆரியபாளையத்தில் ஆற்று வெள்ளம் சூழப்பட்டு தனிமையில் வசித்து வந்த மூதாட்டி குறித்து நேற்று (டிச. 02) தகவல் கிடைத்ததும் வில்லியனூர் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் களத்தில் இறங்கி மூதாட்டியை பாதுகாப்பாக மீட்டார். இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.