ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று (டிச., 03) காலை தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.