மாறி மாறி பழி போடுவதிலேயே திமுக அரசு குறியாக உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மரக்காணத்தில் இன்று (டிச., 03) வெள்ளத்தில் மூழ்கிய உப்பளங்களை பார்வையிட்டு, தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசை முறையாக தூர்வாரும் பணியை செய்ய வலியுறுத்தியும் அவர்கள் செய்வதில்லை. நிதியும் ஒதுக்குவதில்லை என்றார்.