வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. பல மாவட்டங்கள் வெள்ளநீரில் தத்தளித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நின்ற பின்னரும் பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியாக ரூ. 2000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை வைத்துள்ளார்.