

பட்டாசு ஆலை விபத்து - வெடித்து சிதறிய உடல்கள்
குஜராத்: பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீசா நகர் தொழில்பேட்டையில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி: தந்தி