கிராம சபை கூட்டத்தில் எம்பி பங்கேற்பு

60பார்த்தது
கிராம சபை கூட்டத்தில் எம்பி பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி, மேற்கு ஆரணி ஒன்றியம் ஆகாரம் கிராமத்தில் இன்று (அக்.,2) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் தலைமை தாங்கி நடத்தி பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்களை அதன் மீது நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார்.

பொதுமக்கள் ஏற்கனவே பட்டா மாற்றத்திற்கு கொடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பட்டாக்களை கிராம சபை கூட்டத்தில் வழங்கினார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சுப்பிரமணியம், ஆரணி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், மேற்கு ஆரணி ஒன்றிய குழு பெருந்தலைவர், ஒன்றிய கழக செயலாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி