காந்தியடிகள் தன் வாழ்நாளில் பல உணவு கட்டுப்பாட்டுகளை வைத்திருந்தார். உப்பு, சர்க்கரை, பால் போன்றவற்றை அறவே தவிர்த்தார். பின்னர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் உப்பு மற்றும் பாலை எடுத்துக்கொண்டார். இருப்பினும் சர்க்கரையை முற்றிலும் தவிர்த்தார். சமைக்காத அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்த அவர், பெரும்பாலும் பச்சை காய்கறிகள், பழங்களையே உண்டார். ஆட்டுப்பாலும், நிலக்கடலையும் அவர் விரும்பி உண்ணும் உணவாகும்.