உளுந்தூர்பேட்டை - Ulundurpet

கள்ளக்குறிச்சி: பட்டாசு வெடித்த 14 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். தமிழகத்தில் தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசு வெடிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேரக்கட்டுப்பாடு விதித்திருந்தது. அதன்படி காலை 6: 00 மணி முதல் 7: 00 மணி வரையும், இரவில் 7: 00 மணி முதல் 8: 00 மணி வரையும் வெடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் வழக்கு பதிந்தனர். அதன்படி, கள்ளக்குறிச்சியில் 3 பேர், வரஞ்சரம் 2, கீழ்குப்பம், சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயபாளையம், உளுந்துார்பேட்டை, எடைக்கல், பகண்டைகூட்ரோடு, எலவனாசூர்கோட்டை மற்றும் மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையங்களில் தலா ஒருவர், என மாவட்டம் முழுதும் 14 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி