உளுந்தூர்பேட்டை - Ulundurpet

உளுந்தூர்பேட்டை: கோவில் கட்டுமான பணி குறித்து ஆலோசனை

உளுந்தூர்பேட்டை: கோவில் கட்டுமான பணி குறித்து ஆலோசனை

உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த கோவில் கட்டுமான வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அ. தி. மு. க. , மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். டாக்டர் கார்த்திகேயன், தி. மு. க. , வர்த்தகரணி அமைப்பாளர் செல்லையா, ம. தி. மு. க. , ஒன்றிய நிர்வாகி செந்தில், பா. ம. க. , மாவட்ட நிர்வாகி சத்யா, இன்ஜினியர்கள் ஏழுமலை, நடராஜன், தே. மு. தி. க. , ஒன்றிய நிர்வாகி அருள், அ. தி. மு. க. , முன்னாள் மாவட்ட அவை தலைவர் ராமசாமி, வழக்கறிஞர் திலீப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி