உளுந்தூர்பேட்டை - Ulundurpet

கள்ளக்குறிச்சி: தனியார் எதிர்ப்பு.. கோயில் மண்டபம் இடிப்பு

கள்ளக்குறிச்சி: தனியார் எதிர்ப்பு.. கோயில் மண்டபம் இடிப்பு

உளுந்துார்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவின்போது சுவாமி சிலைகளை வைத்து அலங்காரம் செய்ய, அங்குள்ள இடத்தில், 25 லட்சம் ரூபாய் செலவில் 2019ல், மண்டபம் கட்டப்பட்டது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், 'கோயில் மண்டபம் கட்டப்பட்டுள்ள இடம் எனக்கு சொந்தமானது. அந்த இடத்தில் கோயில் திருவிழா தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இதையடுத்து, மண்டபத்தை இடித்து அகற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, உளுந்துார்பேட்டை தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன், பி.டி.ஓ., ராஜேந்திரன் முன்னிலையில், கொட்டும் மழையில் கோயில் மண்டபத்தை நேற்று (நவம்பர் 14) இடித்து அகற்றினர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி