ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய பால்குட விழா.

62பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரிய காலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ காமாட்சி அம்மன் 11 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


போளூர் அடுத்த பெரியகாலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ காமாட்சி அம்மன் 11 ஆம் ஆண்டு கொக்கி தேர் திருவிழாவை முன்னிட்டு 108 பால் குடம் பெருவிழா நடைபெற்றது இந்நிலையில் ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு, 108 பால் குடங்கள் ஊர்வலம் தொடங்கியது இதில், பால் குடம் ஏந்திய பக்தா்கள் விநாயகர் கோயில் முன்பு தொடங்கி கிராமத்தின் முக்கிய சாலையாக காளியம்மன் கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, 108 பால் குடங்களில் இருந்த பாலால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளானூர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி