கோடை விடுமுறை என்றாலே பலரும் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்வதையே விரும்புகின்றனர். ஆனால் அந்த மலைகளுக்கு நிகராக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஜவ்வாது மலை விளங்குகிறது. ஆங்காங்கே பெருக்கெடுக்கும் நீர்வீழ்ச்சிகள், வியூ பாய்ண்ட்கள், படகு சவாரி என இந்த இடம் பார்ப்பதற்கே மிக ரம்யமாக காட்சி தருகிறது. குறைந்த பட்ஜெட்டில் மலை வாசஸ்தலத்தை விரும்புபவர்கள் ஒருமுறை ஜவ்வாது மலைக்கு சென்று வாருங்கள்.