திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு டவுன் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நாகராஜ் (42). அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட வழக்கில் போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் இன்று(செப்.13) கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.